அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன் . காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன் . கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன் .
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன் .காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........அவருடைய ' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா சிறுவன் நான் தான் , அந்த' பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி யும் நான் தான் என்றேன் .
அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள் இவற்றின் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .
கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை .தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன் .


மனதிற்கு பிடித்தவை/பிடித்தவர்கள் உருவம் பெற்று கனவாய் வரும்/வருவார்கள் - ப்ராய்ட்.
அப்படி தான் கடவுள் உருவங்கள் ஆக்கப்பட்டன.
மதுரை வீரன் சாட்சி. எல்லைசாமிகள் சாட்சி. பயம் தான் எல்லாம்!
உங்கள் கனவு உங்கள் மன நிலையை கூறுகிறது. அவர் மாதிரி வர வேண்டும் என்பது ஆசையா?
எனக்கு மோக முள் இன்னும் ஒட்டவில்லை!