Share

Sep 24, 2008

ஜான் ஆப்ரகாம்



அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
 எம்பி சீனிவாசன் நடித்தார்.
விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரகாமை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம் நடந்தது.
நீட்ஷேயின் “The eternal recurrence of the same event”

ஆட்டோ வந்து நிற்கும். ஜான் ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல் குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும் ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர் சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.

அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே காட்சி தான். “The eternal recurrence of the same event!”

நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் ' ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் .

'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும், தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான் இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரகாம் நிலை இடி போல் உரத்து இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரகாமின் கால் தூசு பெறாத சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.


ஒரு சம்பவம்

கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான் சிரித்தபடி சொன்ன பதில் ' நான் அஞ்ஞானி! '

9 comments:

  1. பெரிய மனிதர்களிடம் காணப்படும் சில வித்தியாசமான குணங்கள் போல. ஜான் ஆப்ரகாம் இயக்கிய படம் அக்ரகாரத்தில் கழுதை என்ற தகவல் கிடைத்தது இன்று. நன்றி சார்

    ReplyDelete
  2. நெகிழ வைக்கும் பதிவு..

    வாழ்த்துக்கள்.

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  3. சுவையான பதிவு.

    நன்றி.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  4. Kadavulai pidithikkondal indha madhiri pithanilai yerpadamal thavirkalam. Ungalakkum erai nambikkai ellai enbathu... enakku theriyum.

    Anbudan
    Ashok

    ReplyDelete
  5. Ashok!

    Don't underestimate John Abraham!
    Your Justification is wrong.

    ReplyDelete
  6. ராஜநாயஹம்,

    சொந்த அனுபவங்கள் தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது சரிதான். உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..

    ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ:

    http://nagarjunan.blogspot.com/2008/06/1.html
    http://nagarjunan.blogspot.com/2008/06/2.html
    http://nagarjunan.blogspot.com/2008/06/3.html

    ReplyDelete
  7. Nagarjunan Sir!

    Thanks a lot.

    I'm getting print outs of all your articles in Nagarjunan.blogspot.com. and then read them, that's why I couldn't make comments immediately.

    I feel great for your second comment in my blog.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.