Roman Holiday

ரோமன் ஹாலிடே 1953 ல் வந்த படம் . இப்போது பார்த்தாலும் கிரகரி பெக், ஆட்ரி ஹெப்பெர்ன் இருவர் நடிப்பும் படமும் பிரமிக்க அடிக்கும் . என்ன ஒரு படம் என்று வாய் விட்டு சொல்லவைக்கும் படம் . இந்த படம் ஏன் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதேயில்லை .
வில்லியம் வைலர் இதனை இயக்கிய ஆறு ஆண்டுகளில் Ben-Hur படத்தை தந்து புகழ் பெற்றார் .
பாரமௌன்ட் நிறுவனம் இந்த படத்தை ஹாலிவூட் ல் தான் எடுக்க வேண்டும் என பிடிவாதமாய் இருந்தது . ஆனால் வைலர் இதை இத்தாலியில் தான் படமாக்கவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார் . அதற்கு பாரமௌன்ட் இரண்டு கண்டிசன் போட்டது .' அப்படியானால் படம் கலரில் எடுக்க முடியாது . கதாநாயகியாக யாராவது மிக சாதாரண அறிமுகமே இல்லாத பெண் தான் .' கருப்பு வெள்ளை , ஆட்ரி ஹெப்பெர்ன் இரண்டையும் வைத்து அழியா காவியம் தந்தார் வைலர் .
கிரெகரி பெக் அப்போது ஒன்பது வருடம் முன்பிருந்தே பிரபல நடிகர் . இந்த படத்தில் அவர் நடிக்க வந்தபோது மனநிலை மிகவும் விரக்தி .அவர் தன் முதல் மனைவியை பிரிந்திருந்த சூழல் , விவாகரத்தும் தவிர்க்க முடியாத நிலை . ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் அதன் பின் அவர் உயிர் வாழ்ந்த ஐம்பது வருடமும் அவருக்கு மனைவியாய் நிலைத்து நின்ற பிரஞ்சு பெண் வெரொனிக் பஸ்சாணி ஐ சந்தித்து காதல் கொண்டார் . முதல் மனைவியின் விவாகரத்து கிடைத்த பின் கல்யாணமும் செய்து கொண்டார் .
கிரெகரி பெக் இந்த படம் முடிந்தவுடன் தயாரிப்பாளர்களிடம் ' ஆட்ரி ஹெப்பர்ன் இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது பெறுவது உறுதி . அதனால் அவர் பெயரை முதலில் போட்டு படத்தின் பெயரை போடுங்கள் . தப்பே இல்லை ' என்றார் . பரந்த மனசு ' அறிமுகம் - ஆட்ரி ஹெப்பர்ன் ' என்றே முதலில் போட்டு படத்தின் டைட்டில் போட்டார்கள் .
ஒரு மகாராணி தன் செக்குமாட்டு ராணி வாழ்க்கையை விட்டு தப்பி ( SHE’S TIRED OF THE STRUCTURED LIFE OF ROYALTY )சாமானியன் ஒருவனுடன் ஒரு முழு நாளை கழிக்கும் கதை . பின்னர் தான் இந்த கதை கரு எத்தனை முறை எத்தனை மொழிகளில் நகல் எடுக்கப்பட்டது . The private and secret longings of a Princess!
ஆட்ரி ஹெப்பர்ன் மிக பிரமாதமாக தன் திரையுலக வாழ்வை இந்த படத்தில் துவங்கி Break-fast at Tiffany’s (1961),My Fair Lady (1965) போன்ற மறக்கமுடியாத படங்களின் கதாநாயகியானவர் .
ரோமன் ஹாலிடே படத்தில் கடைசி காட்சி ஒரு கவிதை . ஆம் க்ளைமாக்ஸ் ஒரு கவிதை . அந்த கடைசி Shot ! கிரெகரி பெக் சின்ன புன்னகையுடன் மகாராணியின் வில்லாவிலிருந்து மெல்ல நடந்து வெளியேறுவது !
“You don’t know how delighted I am to meet you.”
How much would a real interview with this dame worth? Her innermost thoughts revealed to a reporter in a private,personal,exclusive interview!

6 comments:

  1. சீனு said...:

    http://jeeno.blogspot.com/2006/12/1953.html

  1. Raj Chandra said...:

    Julia Roberts' "Notting Hill" is also loosely based on this. But the climax is different.

    I think taking Roman Holidays in B/W added more depth to Audrey's graceful beauty.

    Though I hate the romantic movies (most of them are good for nothing), "Roman Holiday" and "Notting Hill" are still my favourites.

  1. Panner selvam said...:

    Wow sir.

    I am always a fan of your posting.

    Your knowledge on the movies and english prose is amazing.

    i had seen roman holidays n times.

    but never had known anyone who had watched that film

    you are really a pundit in english.

    i want to talk to you sir.

    may i have your number?

    please mail to vpannerselvam@gmail.com

    i am doing first year ECE engineering in coimbatore


    thank you

  1. அந்த கடைசி Shot ! கிரெகரி பெக் சின்ன புன்னகையுடன் மகாராணியின் வில்லாவிலிருந்து மெல்ல நடந்து வெளியேறுவது !
    ...அழகான பதிவு ராஜநாயஹம்.
    அன்புடன்
    ராஜா சந்திரசேகர்
    www.raajaachandrasekar.blogspot.com

  1. Sethu Raman said...:

    You took me down memory lane! Can anyone forget Audrey's slim and charming figure and her action - this was a poem in celluloid!

  1. மிக நேர்த்தி. மை பேர் லேடியும் மறக்க முடியாத ஒன்று.

Post a Comment

Followers