கே எஸ் ஜி

கே எஸ் ஜி எனப்படும் இயக்குனர் கே எஸ் கோபால கிருஷ்ணன் உச்சத்தில் இருந்த காலத்தில் மிகுந்த வாய்த்துடுக்கு உள்ளவர் . சிவாஜியிடம் கூட தன் வாய்த்துடுக்கை காட்டக்கூடியவர் .யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார் .விநியோகஸ்தர்களிடம் முகத்தில் அடித்தாற்போல பேசி விடுவார் .

சாதாரண கதாசிரியராய் இருக்கும்போதே ஏவிஎம் ஸ்டூடியோவில்சுவாரசியமாக கே எஸ் ஜி ஒரு படத்தின் கதையை விளக்கமாக சொல்லிக்கொண்டிருக்கும்போது ஏ வி எம் செட்டியாரிடம் மிக தற்செயல் அனிச்சையாக டீ குடித்த பின் எச்சி கப்பை கொடுத்து விட்டாராம் .

கை கொடுத்த தெய்வம் படத்தில் எஸ் எஸ் ஆர் எழுதிய கடிதம் . சிவாஜி வாசிக்கவேண்டும் . முண்டா பனியன் நாலு முழ வேட்டியுடன் செட் டில் இயக்கும் கே எஸ் ஜி 'நீங்கள் கடிதத்தை வாசிக்கிற முகபாவம் கொடுத்தால் போதும் .ராஜேந்திரன் குரல் படத்தில் ஓவர்லேப் செய்து கொள்வேன்' என சொல்லியதும் " யோவ் கூனா கானா நானே என் குரலில் பேசிடுரேனே " (சிவாஜி செல்லமாக கூனா கானா என்று தான் கே எஸ் ஜி யை கூப்பிடுவாராம் )என்றதும் மூக்குபொடியை உறிஞ்சிய குள்ளமான கே எஸ் ஜி ' இது என் படம், நான் டைரக்டர் . நான் சொல்றபடி செய்யுங்க " என்றாராம் .

எஸ் வி ரங்கா ராவ் இவர் படங்களில் மிகவும் பயன்படுத்தப்பட்டவர் . சாரதா துவங்கி,தெய்வத்தின் தெய்வம் , கற்பகம் ,கைகொடுத்த தெய்வம் ,பேசும் தெய்வம் ,கண்கண்ட தெய்வம் என்று எத்தனையோ படங்கள் ரங்கா ராவ் நடிப்பால் பெருமைப்படுத்தப்பட்டவை .இந்த கண் கண்ட தெய்வம் என்ற படம் ரங்காராவ் ,எஸ் வி சுப்பைய்யா,பத்மினி அருமையாக நடித்திருப்பார்கள் .இந்த படம் மீண்டும் ரங்காராவ் ,சுப்பையா இருவரும் மறைந்த பின் (ரங்காராவ் 1974 ல் மறைந்தார் .1980ல் சுப்பையா மறைந்தார் )பலவருடம் கழித்து சிவாஜி , தேங்காய் சீனிவாசன் ,கே ஆர் விஜயா நடிப்பில் "படிக்காத பண்ணையார் " என பலவருடம் கழித்து கே எஸ் ஜியால் இயக்கப்பட்டு வந்தது .ரங்காராவ் ,சுப்பையா இருவரும் எவ்வளவு சிறந்த மகத்தான நடிகர்கள் என்பதை உணர்த்துவதாக படிக்காத பண்ணையார் அமைந்து விட்டது.பத்மினி இடத்தில் கே ஆர் விஜயா சகிக்கவில்லை .கண் கண்ட தெய்வம் படத்திற்கு உறை போட காணாது படிக்காத பண்ணையார் .

ரங்காராவ் ஆதி பராசக்தி படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்த சொல்லி கே எஸ் ஜி " என்னய்யா ,எருமை மாடு மாதிரி நிக்கிரீயேய்யா " என ரங்காராவ் அவர்களை பார்த்து சத்தமாக திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய நடிகரைப்பார்த்து இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம் .

கற்பகம் ஸ்டூடியோ நிறுவப்பட்ட இடம் அப்போது இவருக்கு கே ஆர் விஜயா கொடுத்தது . மிக காஸ்ட்லி குருதட்சனை .அதை நெகிழ்ச்சியுடன் கே எஸ் ஜி குறிப்பிடுவார் .இந்த உலகத்திலேயே சம்பாதித்த சொத்தை மற்றவருக்கு தானமாக கொடுத்தவர் கே ஆர் விஜயா தான் என கே எஸ் ஜி நன்றியோடு குறிப்பிடுவார் .

3 comments:

  1. ttpian said...:

    why providing priority for cinema actors?

  1. Cinema Virumbi said...:

    ராஜநாயஹம் சார்,

    மறைந்த நாடகாசிரியர் திரு கோமல் சுவாமிநாதனின் சுய சரிதை ' பறந்து போன பக்கங்கள்' ('சுப மங்களா' வெளியீடு, இணையத்திலும் கிடைக்கக் கூடும்) படித்துப் பாருங்கள்! 1960-67 வரை அவர் கே.எஸ்.ஜி. இடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை மிக அழகாக விவரித்துள்ளார்! 'சாரதா' ஹிந்தியில் 'Suhaagan' என்று தயாரான போது அமரர் குருதத்துடன் ஏற்பட்ட அனுபவங்கள், தீபம் நா.பா. அவர்கள் கே.எஸ்.ஜி.க்கு அனுப்பிய நோட்டீஸ், அதற்கு அவர் எழுதிய பதில், TNEB யில் பணி புரிந்து வந்த திரு மகரிஷியின் 'என்னதான் முடிவு?' படமாக வந்த கதை , 'ஆயிரம் ரூபாய்' இல் 'கடைசியில் ஜெமினி இறந்து விட்டால் படம் தப்பிப் பிழைக்கும்' என்ற கோமலின் ஐடியாவை கே.எஸ்.ஜி விரும்பி ஏற்றது , குற்றாலம் அருகே படப் பிடிப்பு முடிந்ததும் இரவில் காட்டில் வேட்டைக்குப் போன குழுவினர் சிலர் தவறிப் போய் ஒரு கரடியைச் சுட்டுத் தள்ளியது , ஒரு முனகல் கூட இல்லாமல் செத்துப் போன அந்தக் கரடியின் மேல் கால் வைத்து ஒரு ஜமீன்தார் துப்பாக்கியுடன் போட்டோ எடுத்துக் கொண்டது என்று 'கற்பகம்', 'கை கொடுத்த தெய்வம்' தொடங்கி 'சித்தி', 'சின்னஞ்சிறு உலகம்', 'பேசும் தெய்வம்', 'செல்வம்' வரை அவர் கே.எஸ்.ஜி. உடன் பணியாற்றியதை அவர் எழுத்தில் படிக்கும் போது புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாது!

    நன்றி!

    சினிமா விரும்பி

  1. RP RAJANAYAHEM said...:

    Cinema virumbi Sir!

    I have read it as a serial in Subamangala itself.

Post a Comment

Followers