Share

Mar 3, 2009

Carnal Thoughts -17


ஒரு இளம் வாலிப காக்கை !
இலட்சியவெறிகொண்டது.

ஸ்வதேசாபிமானம் ,ஸ்வபாஷாபிமானம் மிக்க காக்கை . தமிழ் பாஷை யில் இருப்பது போல நமது காக பாஷையிலும் கவிதை அமைவதற்குரிய விதிகள் ஏற்படுத்தி , நமது காக பாஷையை காவியங்களும் ,பாட்டுக்களுமுடைய பாஷை யாக்குவது தான் என் முழு நோக்கமும் என ஒரு பெட்டை காகத்திடம் சொல்லிக்கொண்டு இருந்தது ."நான் இருக்கனே ! பலவிதமான கற்பனைகளை அப்படியே மனசிலே அமுக்கி வச்சிட்டு தவிக்கிறேன் . அதையெல்லாம் எடுத்து வெளிய விடவேணாம் ?"

ஆணும் பெண்ணும் கூடி இருக்க விரும்புமாறு வற்புறுத்த விரும்பும் இயற்கையின் சாட்டையடி போல மேற்கு மலை சாரலில் மழை தூறிகொண்டிருந்ததாம் .

மன்மத தேவனுக்கு இப்படிப்பட்ட பருவங்களில் ,இப்படிப்பட்ட பிரதேசங்களில் ,வேலை மூச்சு முட்டும் .பயங்கர பிசி .ஆதலின் அன்று மாலை அவன் தன் தூணி யிலிருந்த அம்புகளில் ( ஆமாம் ! மன்மத பாணம்!) பெரும்பகுதியை ச்செலவிட்டு , தன் காதலியாகிய ரதி தேவியின் சல்லாபம் வேண்டி அவசர அவசரமாக தன் உலகத்துக்கு சென்று கொண்டிருந்தான் .இரண்டே இரண்டு கணைகள் மாத்திரமே எஞ்சியிருந்தன . அவற்றை 'லீலார்த்தமாக ' , மேலே சொல்லப்பட்ட ஆண் (இலட்சிய வேட்கை கொண்ட ) காகம் , அதன் கூட இருந்து அதன் இலட்சிய வேட்கை வெக்கையில் புழுங்கி கொண்டிருந்த பெண் காகம் இரண்டின் தலைக்கு ஒன்றாக அழுத்தி விட்டு ப்போய் விட்டான் . அவன் போய் விட்டான்.யாரு ? மன்மதன் !
இலட்சிய காகம் கவிதை தொழில் படிக்கவே இல்லை . மதன சாஸ்திரம் படிக்க தொடங்கி விட்டது .
..
இது பாரதி எழுதிய சிறுகதை ' காக்கை இலக்கணம் கற்ற கதை '

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.