Share

Jan 11, 2015

S.V.சஹஸ்ரநாமம்

கோவை சிங்காநல்லூர்க்காரர் எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நடிகர்கள் அனைவரிலும் ஒரு வித்தியாசமானவர். 1950களிலும் 1960களிலும் இவரை சுற்றி தமிழ் இலக்கிய உலகைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சூழ்ந்திருப்பார்கள். 

தோழர் ஜீவா,தொ.மு.சி.ரகுநாதனுடன் கல்கத்தாவில் நடந்த தாகூர்  நூற்றாண்டு விழாவிற்கு சகஸ்ரநாமம் சென்றிருக்கிறார்.
இவரது சேவா ஸ்டேஜ் நாடகக்குழு தி.ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலம்’, பி.எஸ்.ராமையாவின் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ போன்ற நாடகங்களை மேடையேற்றின. ஜானகிராமனுடன் இவருக்கு நெருக்கம் இருந்தது. ‘நாலு வேலி நிலம், 1959ல் சினிமாவாகவும் வந்தது.அதே வருடம் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' திரைப்படமும் வந்தது.

இவரது சேவா ஸ்டேஜ் மூலம் திரையில் பிரபலமானவர்கள் தான் தேவிகாவும் முத்துராமனும்.
1990களில் கமலின் மைக்கல் மதன காமராஜன், மஹாநதியில் சக்கைப்போடு போட்ட பாட்டி எஸ்.என்.லட்சுமி கூட சேவாஸ்டேஜ் நடிகை தான்.
காதலிக்க நேரமில்லை படத்தில்  நாகேஷின் மாமனாராக நடித்த பிரபாகர்  நாலு வேலி நிலம் நாடகத்தில் கேபிரியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். (பிரபாகர் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவனில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்,)
ஜானகிராமன் வடிவேலு வாத்தியார், டாக்டருக்கு மருந்து நாடகங்களையும் எழுதியவர். நாலு வேலி நிலத்தில் அவரது பிரபலமான கடன் தீர்ந்தது கதையைக்கூட நாலி வேலி நிலத்தில் பயன்படுத்தியிருந்தார்.
தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி இருவரும் சகஸ்ரநாமத்தின்  நல்ல நண்பர்கள். இவரைத்திரையில் பார்க்கும்போதெல்லாம் இவருடைய இலக்கியத்தொடர்பு பற்றிய நினைவின் காரணமாக அதையே தான் நான் நினைப்பேன்..

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலத்தில் சகஸ்ரநாமம் நாடகம் ‘தூக்குக்கயிறு’ ரொம்ப பிரபலம். 

கலைவாணருடன் இவருக்கு நெருக்கம் இருந்தது. கலைவாணர் தன்னை திருமணம் ஆகாதவர் என்று சொல்லி நம்ப வைத்துத் தான் நடிகை டி.ஏ.மதுரத்தை கல்யாணம் செய்திருந்த நிலையில் ரயில் பயணத்திலிருந்த கலைவாணரை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த சகஸ்ரநாமம் வெள்ளந்தியாக நாகர்கோவிலில் இருந்த கிருஷ்ணனின் முதல் மனைவியின் ஸேமலாபங்களைப்பற்றி விசாரித்திருக்கிறார்.அப்போது தான் கலைவாணரின் அருகிலிருந்த மதுரத்திற்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் என்கிற விஷயமே தெரிய வந்ததாம். 
என்.எஸ்.கிருஷ்ணன் சிறை (லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ) செல்ல  நேர்ந்த போது சகஸ்ரநாமம் தான் அவரது நாடகக்குழுவை, கவனித்துக்கொண்டவர். ஒரு திரையுலக வதந்தி இவரை மதுரத்துடன் இணைத்தது.

‘நல்லதம்பி’யில் கலைவாணர், பி.பானுமதியுடன் சகஸ்ரநாமம் நடித்திருக்கிறார்.
இவர் வில்லனாக நடித்த ஏ.வி.எம்மின் ‘ வாழ்க்கை’யில் தான் வைஜயந்திமாலா அறிமுகம். 
தொடர்ந்து சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’யில் அண்ணனாக நடித்தவர்.
ஸ்ரீதரின் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் இவர் தான் போலீஸ்காரன்.(பி.எஸ்.ராமையாவின் நாடகம் 'போலீஸ்காரன் மகள்')
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘செல்வம்’ – இவர் வில்லன் என்பது கடைசியில் தான் தெரியும்(!).
ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த உரிமைக்குரலில் சகஸ்ரநாமம் அண்ணன் ரோல்.

பொருளாதாரம் என்ற அளவில் சகஸ்ரநாமம்  தான் வாழ்ந்த வீட்டைக்கூட விற்க வேண்டியிருந்தது.

ிர் எஸ்.வத்ீஸ்வின் ாயார் சஸ்ராமத்ின் சி.




 .......................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.