Share

Apr 7, 2016

உச்சம் பெற்ற தீரம்








கருணாநிதி ’காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “ என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்”

கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல்
“ தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!”


எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று - எம்.ஜி.ஆர் ”கூத்தாடி”, அதிமுக ”நடிகர் கட்சி!”
தன் மீதான ”கூத்தாடி” விமர்சனத்திற்கும், அதிமுக - ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார் ”கருணாநிதி தாசி பரம்பரை”
எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம்“சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!”


கையில் பச்சை குத்திக்கொண்டு அ.தி.மு.க.வை வளர்த்த நாஞ்சில் மனோகரன் பின்னாளில் எம்.ஜி.ஆரின் சந்தேகக்குணத்தின் வெக்கையை சகிக்க முடியாமல் தி.மு.க திரும்பினார்.
”கருவின் குற்றம்” கவிதை எழுதி நாஞ்சில் மனோகரன் கட்சியின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.

மதுராந்தகம் ஆறுமுகம் கடுமையாக ஒரு கவிதை எழுதி எதிர் வினையாற்றினார்.
கருணாநிதி நயத்தக்க நாகரீகத்துடன்,பெருந்தன்மையுடன்
மன்னித்தார் “ நாஞ்சிலார் நெஞ்சிலே நஞ்சிலார்”


மனோகரனை காட்டமான கவிதையால் தாக்கிய மதுராந்தகம் ஆறுமுகம் பின்னாளில் வைகோவுடன் போனார் என்பது தான் அபத்தம்.

இன்று கருணாநிதி ஜாதி வைகோவின் தாக்குதல். எதிர்ப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மன்னிப்பு கேட்டு அறிக்கை.

கருணாநிதி அளவுக்கு நிந்திக்கப்பட்ட அரசியல்வாதி உலகத்திலேயே யாரும் இருக்கமாட்டார்கள்.

வெற்றிகொண்டான் ஒரு பொதுமேடையில் பொங்கினார்“என் தலைவனுக்கு ஜாதி பின்புலம் சரியில்லை என்பதனால் தானே அவரை ஏளனம் பேசுகிறீர்கள்!”

தமிழ் நாட்டில் தலித்தாக, முக்குலத்தோராக, நாடாராக, கவுண்டராக, நாய்க்கராக, நாயுடுவாக பெருகிய ஜனத்தொகை கொண்ட இனத்தில் பிறந்தவருக்குத் தான் அரசியல் மேடை என்ற விதி இன்று இறுகி, ஆழமாக வேறூன்றி விட்டது.

அன்று இந்த சட்டங்களையெல்லாம் தூள் தூளாக்கி கருணாநிதி உச்சம் பெற்ற தீரம் அதிசயமானது. மகத்தானது.

எம்.ஜி.ஆரும் கொடி கட்டிய போது இந்த ஜாதி அரசியலை மீறிய அவருடைய ”மக்கள் செல்வாக்கு” மலைக்க வைக்கிறது.

பிராமண இனத்தில் பிறந்த ஜெயலலிதாவின் எட்டுக்கண்ணும் விட்டெரிகிற செல்வாக்கு.


தமிழ் நாடு ஒரு விசித்திர, வினோத அரசியல் களம்!

.........................................................

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/the-man-who-scared-indir…

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_08.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.