Share

Apr 11, 2016

Carnal Thoughts - 40




இது என்னுடைய 800வது பதிவு!

  கிளர்ந்தெழும் தாபம் - 40


காட்சி 1

நண்பர்களாக ஒரு பத்து பேர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த நேரம்.
வழக்கம்போல் நான் வான வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தேன். எல்லோரும் ஒவ்வொரு நகைச்சுவைக்கும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மட்டும் சிரிக்காமல் திகைத்த தோரணையில் சிலையாக அமர்ந்திருந்தார். வந்திருந்த மற்ற யாரோ ஒருவருக்கு நண்பராயிருக்கலாம். அவருக்கு வாயின் இரு ஓரத்திலும் பட்டன். வாய்ப்புண். அதை பட்டன் என்றே சொல்வார்கள். வெள்ளையாக மேல் உதட்டின் இரு ஓரத்திலும் கீழ் உதட்டின் இரு ஓரங்களிலும் புண்.


’சார் யார்?’ என்று சாதாரணமாகத்தான் ஒருவர் கேட்டார். அந்த நிமிடத்தில் சுறுசுறுப்பாகி வாயில் பட்டன் உள்ள நபர் “என்னை கேட்கிறீங்களா? நான் யாருன்னா கேட்கிறீங்க? நான் யானை சுன்னிய ஊம்பனும்னு ஆசைப்பட்டன். இப்ப என்னாச்சு பாருங்க!” என்றவாறே இரண்டு கைகளின் நடுவிரல்களையும் வாயின் இரண்டு ஓரங்களில் விட்டு  பட்டன்களை எல்லோரும் பார்க்கும்படியாக சுற்றி ஒரு அரை வட்டமடித்து  காட்டினார்.

அகலக்கால் வைத்து பிசினஸில் பெரிய அடி வாங்கினாராம். அதற்கு Metaphor!

வாயில் அவருக்கு இரண்டு பட்டன் இல்லாமலிருந்தால் இவ்வளவு ரீச் ஆகியிருக்காது! எல்லோரும் கண்ணில் நீர் வர சிரித்து மாளவில்லை.


…………………………………………………

காட்சி 2

பிஸியான பஜார். ஒரு இளைஞன் ஒரு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த சைக்கிள் மீது சீட்டில் உட்கார்ந்திருந்தான்.

ஒரு ஆள் கத்திக்கொண்டு ஓடி வந்தான். “யோவ் என்னய்யா, ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருக்கிற சைக்கிள்ள ஏறி ஒக்காந்திருக்க. அறிவு இருக்கா?”
இளைஞன் சட்டென்று சைக்கிளில் இருந்து இறங்கி விட்டான்.
”சாரிங்க..சாரி..”

”முட்டாக்கூதி, கூறுல்ல? சோத்த திங்கிறியா? பீய திங்கிறியா?”

வாலிபன் “ அதான் நீங்க பாத்தவுன்ன இறங்கிட்டனே..சாரி சொன்னது காதுல உழுவல..?”

சைக்கிள்காரர் “ ஏன்டா, நான் உங்க அக்கா மேல ஏறிட்டேன்னு வச்சுக்க.
நீ அப்ப பாத்திட்ட.. நான் உடனே இறங்கிட்டா நீ உட்டுடுவியா? சாரி சொன்னா உட்டுடுவியா?”
...................................

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-39.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-38.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-35.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/…/06/carnal-thoghts-32.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-31.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-30.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-18.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-14.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-12.html


....................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.