Share

Nov 19, 2009

கிருஷ்ணமூர்த்தி ப்ளாகில்

http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_18.html

முதலாவதாக, நாலு வரியோ, நாற்பது வரியோ, சொல்ல வரும் விஷயத்தை நச்சென்று சொல்லக் கூடிய திறமை உள்ள ஒரே பதிவர் என்னைப்பொருத்த வரை தமிழில்

R P ராஜநாயகம் தான் ! பெயருக்குத் தகுந்தாற்போல, அவர் ராஜநாயகம் தான்!


சாம்பிளுக்கு இங்கே மற்றும் இங்கே!
பச்சையாக எழுதுகிறார் என்று சிலபேர் நினைக்கக் கூடும். வெண்டைக்காய் மாதிரி என்ன சொல்ல வருகிறோம் என்பதையே சொல்லாமல் வழவழவென்று எழுதிக் கொண்டிருப்பவர்களை விட, நேருக்கு நேரான வார்த்தைகளில் உயிரோட்டத்தைச் சொல்ல முடிந்த ஒரே எழுத்தாளர் ராஜநாயகம் மட்டும் தான் என்பது என்னுடையகருத்து.

ஜூன் முப்பதன்று வால்பையன் என்னிடம் சாட்டிங்கில் வருத்தப்பட்டுச் சொன்னது-"இன்றைக்குப் புதுமைப்பித்தனுடைய பிறந்தநாள்! அவரைப் பின் பற்றித்தான் எழுதவே வந்தோம் என்று சொல்லிக் கொள்கிற எவருக்கும் புதுமைப் பித்தனைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை!” - இப்போது எதற்காக இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

இன்றைக்கு தி. ஜானகி ராமனுடைய பிறந்த நாள்!

நினைவு வைத்துக் கொண்டு எழுதிய ஒரே பதிவர் ராஜநாயகம்! தான் வாசித்ததில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் லயித்துப் போய், அதில் இருந்து தெறிக்கும் சின்னச் சின்ன எண்ணச் சிதறல்களை அப்படியே பதிவுகளில் வார்க்கும் வித்தை தெரிந்த ஒரே வலைப்பதிவரும் ராஜநாயகம் தான்!

நிகழ்காலத்தில்... said...November 18, 2009 8:32 PM
ராஜநாயகம் அவர்களின் எழுத்தைப் படித்து பலமுறையும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.சங்கீதம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் அவர் குறிப்பிடுகிற நபர்கள், நுணுக்கங்கள் சபாஷ் போட வைக்கும்.அரசியல், திரைத்துறை என அவரின் வீச்சு பட்டிக்காட்டான மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் என்னைப் பார்க்க வைக்கும்

3 comments:

  1. மிகவும் நன்றி

    என்னுடைய பெயரை என் விருப்பப்படி R.P.ராஜநாயஹம் என்று எழுதினால் சந்தோசப் படுவேன் . என் உணர்வுகளை நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகிறேன் .

    ReplyDelete
  2. கூகிள் இண்டிக் உபயோகித்துத் தமிழில் தட்டச்சுச் செய்கிறேன். அதில் பல சமயங்களில் க ஹ இரண்டும் க வாகவே வந்துவிடுகிறது. உங்களுடைய உணர்வுகளையும், ஆழ்ந்த வாசிப்பையும்,அதைப் பகிர்ந்துகொள்கிற விதத்தையும் மிகவுமே மதிக்கிறேன் ஐயா!

    என்னுடைய பதிவுகளில் உங்களை quote செய்திருப்பதை நேற்றே மின்னஞ்சலில் தகவல் சொல்லியிருந்தேனே?

    ReplyDelete
  3. பேச்சு வழக்கிலான பெயரே எழுத்திலும் வந்து விட்டது, பொறுத்துக்கொள்ளுங்கள்

    இனிமேல் R.P.ராஜநாயஹம் என மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன்

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.