Share

Aug 28, 2012

What a piece of work is a Man!

 R.P.ராஜநாயஹம் யார் ?

 

  இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள் 

 

தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.

அசோகமித்திரனின் சீடன் .

Shakespearean scholar!


 .....
 



மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்

கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி

கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.

உறவினர்கள் அனைவருக்கும் -துரை
( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )


ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்

காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !

சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன்
ராஜநாயஹம்!

பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'

எஸ்.ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!

யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
- ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’

 .................................

ராஜநாயஹம் எழுத்து 

 

பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com

..........................................................

எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
kuttipisasu.blogspot.com

............................................................................


wandererwaves.blogspot.com
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.


.......................................................................


என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom

.........................................................................

NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்
கும் நிஜமாகாது. ஆனா, R .P R யோட 2 வருஷ பதிவுகளை பாருங்க.இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது

.....................


பிடித்ததை படித்ததில்...1
writerprc.blogspot.com


தமிழில் எழுதுபவர்கள் மிக குறைவு என்றே நினைத்தேன், ஆனால் தேடியதில் சில புதுமையான, இனிமையான தளங்கள் என் திறையில் அகப்பட்டது. அவைகளில் சில..

http://rprajanayahem.blogspot.com/

http://jyovramsundar.blogspot.com/

http://vijisekar.wordpress.com/

http://nizhalkal.blogspot.com/

http://nagarjunan.blogspot.com/

..........


ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.

டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?


சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.

ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

.....

Sep 24, 2009



யார் நீ?


"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."
- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'

கரு இல்லாத முடடையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Question: Who the hell are you?

My reply : Didn't I ever mention it?!


Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

ரயில் சிநேகம் -ப்ளாக் சிநேகிதம் ஒரு ஆராய்ச்சி பதிவு யாராவது எழுதிப் பார்க்கலாம் . பெரிய பிரமைகள் தேவையே இல்லை. நேர்மையேயில்லாத முகமற்ற Anonymousகளின் பின்னூட்ட உலகமல்லவா ?
Comments are free, but Facts are sacred!

தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.


அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!

..........................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.